வெளிநாட்டு ஊழியர்களால் அமெரிக்கர்களின் வேலை பறிபோகிறதா? எலான் மஸ்க் சொன்ன பதில்..! - Seithipunal
Seithipunal


சொந்த நாட்டில் அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகிறது. 

வெளிநாட்டு தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பரிக்கிறார்களா என்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் வெளி வந்தவர்களின் தாக்கம் குறித்து Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மசாத் கேள்வி  எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டினர் அனைத்தையும் எடுத்துக்கொண்டதால், தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் வருகிறதா என்று மசாத் தனது பதிவில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்றும் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், சிறந்த பொறியியல் திறமைகளுக்கு இங்கு நிரந்தர பற்றாக்குறை உள்ளது.

இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடிப்படை காரணியாகும் என்று பதில் அளித்துள்ளார்.

சிலிகான் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் பிரதான இடம். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய மஸ்க்கின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் மஸ்க் முக்கியபங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are foreign workers taking away American jobs


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->