இஸ்ரேல் வான்வழி தாக்குதலுக்கு இத்தனை உயிர்கள் பலியா?...ஐ.நா கடும் கண்டனம்!
Are so many lives lost in Israel aerial attack UN strongly condemned
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் உள்ள நுசிராட்டில் பள்ளிக்கூடமாக மாறிய தங்குமிடத்தின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு ஐ.நா. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சுமார் 12,000 பேர் தங்குமிடமாக மாறிய பள்ளிக்கூடத்தில் மீண்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களில், 6 பேர் ஐ.நா. ஊழியர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Are so many lives lost in Israel aerial attack UN strongly condemned