ஊழல் வழக்கு : அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை.!
Argentina vice president sentenced to 6 years in prison in corruption case
அர்ஜென்டினாவில் ஊழல் வழக்கில் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் டி கிர்ச்னருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அர்ஜென்டினாவின் துணை அதிபராக 69 வயதான கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பொதுப்பணிக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும் சாட்டப்பட்டது.
ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்த பெர்னாண்டஸ், இது அனைத்தும் பொய்கள் மற்றும் அவதூறு என்று கூறிவந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது.
இதில் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டினாவை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் அவர் பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Argentina vice president sentenced to 6 years in prison in corruption case