அருவி இயற்கை தான்.. ஆனால் தண்ணீர் செயற்கை.. எங்கு என்று தெரியுமா..!? - Seithipunal
Seithipunal


இயற்கையாக நீர் வரத்து குறைந்த ஒரு அருவியில் பெரிய குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்படுகிறது. சீனாவில் உள்ள மிகப் பெரிய அருவி ஒன்றில் தான் இந்த கூத்து நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் யூண்டாய் மலையில் உயரமான மிகப்பெரிய அருவி ஒன்று உள்ளது. 

ஏறக்குறைய 314 மீ உயரம் உடைய இந்த யூண்டாய் அருவி,  உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற யூண்டாய் மலையின் மேல் உள்ள பூங்காவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான இந்தப் பகுதியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணம் இருப்பர்.

இங்கு ஆண்டு முழுவதுமே எப்போதும் தண்ணீர் வரத்து குறையாமல் ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும். இந்நிலையில் தற்போது அந்த அருவியில் நீர் வரத்து இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு பெரிய குழாய் மூலம் அந்த அருவியில் மேலிருந்து தண்ணீர் கொட்டப்படுவது போல் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதையடுத்து யூண்டாய் அருவி குழாய்களில் தான் உற்பத்தியாகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் விமர்சனங்களும், கேலியும் எழுந்தது. இதையடுத்து பூங்கா நிர்வாகத்தினர் "கடும் வறட்சி காலங்களில் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் தண்ணீர் இல்லாமல் ஏமாந்து விடக் கூடாது என்னும் நோக்கில் தான் குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்பட்டது" என்று விளக்கம் அளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Artificial Water in Natural Falls


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->