லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: மெக்சிகோவில் 41 பேர் உடல் கருகி பலியான சோகம்!
At least 41 dead after bus collides with truck in Mexico
மெக்சிகோ நாட்டில் லாரி மீது பஸ் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
வடக்கு அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ நாடு . இந்த நாட்டின், குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரில் இருந்து சம்பவத்தன்று நேற்று டபாஸ்கோ நகருக்கு பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சில் 48 பேர் பயணித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எஸ்கார்சிகா என்ற பகுதியில் பஸ் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது.இதையடுத்து இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர்.தீயில் சிக்கிக்கொண்டவர்கள் அலறி துடிக்க ,இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பற்றி எரிந்த தீயை அணித்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த 41 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
At least 41 dead after bus collides with truck in Mexico