படகு தீப்பிடித்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பேர் பலி..காங்கோவில் சோகம்!
At least 50 people including women and children were killed in a boat catch. Tragedy in Congo
காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உடல் கருகி பலியாகினர்.உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு போக்குவரத்து மக்களின் முக்கிய போக்குவரத்தாக ஆதாரமாக இருக்கிறது. வணிகம் மற்றும் அவசர காலங்களில் ஆறுகளில் படகு போக்குவரத்து மூலம் மக்கள் தங்கள் பணிகளை நிவர்த்தி செய்கின்றனர்.அதுமட்டுமல்லாமல் காங்கோவில் அடிக்கடி படகு போக்குவரத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நிகழ்ந்துவருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது .வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகு விபத்துக்குள்ளானது . அந்தப் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர். பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அந்த படகில் தீ விபத்து ஏற்பட்டது.
உடனடியாக இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர். ஆனால் அப்போது துரதிருஷ்டவசமாக படகும் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதனை தொடந்து காணாமல் போன மற்றவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.படகு தீப்பிடித்த விபத்துக்கு பெண் ஒருவர் சமையல் செய்ததே காரணம் என கூறப்படுகிறது.
English Summary
At least 50 people including women and children were killed in a boat catch. Tragedy in Congo