ஆஸ்திரேலியா | அரிய வகை நோயால் பாதிக்கபட்ட 10 வயது சிறுமி! ஆடைகளை கூட அணிய முடியாத பரிதாப நிலை! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் பெல்லா மேசி (வயது10) எனும் சிறுமிக்கு உலகிலேயே அரிய வகை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் சிறுமியின் வலது காலை முழுவதுமாக தாக்கியுள்ளதால்  அவர் நகரும் போதும், அந்த காலை தொடும்போதும் காலில் கடுமையான வலி ஏற்படுகிறது. 

விடுமுறைக்கு அவர் குடும்பம் பிஜி நாட்டிற்கு சென்றிருந்த போது, சிறுமியின் வலது காலில் ஒரு கொப்புளம் போன்ற ஒரு புண் ஏற்பட்டது. அது குறித்து எடுக்கப்பட்ட பரிசோதனைகளில் சிறுமிக்கு நரம்பியல் தொடர்பான பிராந்திய வலி நோய்க்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது.  

உலகில் மனிதகுலமே அறியாத அளவுக்கு மிகவும் வேதனையான நிலை என்றும், தீவிர வலியை ஏற்படுத்தும் அரிய நோய் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுமியின் இந்த வலி உணரப்படும் இடங்கள் குறித்து அவர் தெரிவிக்கையில், "எனக்கு கால் அதிகமாக எறிவதால் என்னால் குளிக்க கூட முடியாது. எனது காலில் எந்த இடத்தையும் தொட முடியாது" என தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான செயல்கள் பள்ளிக்கு செல்வது, விளையாடுவது மட்டுமின்றி, ஆடை அணிவது போன்ற அன்றாட தேவைகளை கூட அவரால் செய்ய முடியாது. இதற்கான மருத்துவம் ஆஸ்திரேலியாவில் கிடைக்காததால், பெல்லாவும் அவரது தாயும் அரிசோனாவில் உள்ள ஸ்பெரோ கிளினிக்கில் மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.  

மேலும் சிகிச்சைக்கு தேவையான பணத்திற்காக ''கோஃபண்ட்மீ'' வலைத்தளம் மூலமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த சிறுமி அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் நோயால், அவரது குழந்தை பருவ மகிழ்ச்சியை இழந்து கொடூரமான வலியுடன் போராடி வருகிறார். 

அவரது வலது கால், இடுப்பு பகுதிகளின் இயக்கம் நின்று விட்டதால் பெரும்பாலும், சிறுமி படுக்கையில்தான் இருக்கிறார். வீட்டிற்குள்ளே சுற்றி வர வேண்டும் என்றால்கூட சக்கர நாற்காலியின் உதவியால்தான் செய்ய முடிகிறது என்று, கோஃபண்டுமீ என்ற சமூக வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia 10 year old girl attacked rare


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->