ஆஸ்திரேலியா கடற்கரையில் விழுந்த மர்ம பொருள்! சந்திராயன் - 3? என்ன இது? அதிர்ச்சியில் உலகம்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகில் கடற்கரை ஓரமாக ஒரு பொருள், பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது. 

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்தப் பொருளிலிருந்து பொதுமக்களை விலகி இருக்குமாறு அறிவுறுத்தினர். 

இது குறித்த ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் தெரிவித்ததில், மதியமேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி இருப்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். 

இது வெளிநாட்டு விண்வெளி ஏவுகணைகளில் இருந்து வந்திருக்கலாம் என மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வது அல்லது நகர்த்த முயற்சிப்பது போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் ஒதுங்கி அந்த பொருள் சமீபத்தில் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட சந்திராயன்- 3 விண்கல ராக்கெட்டின் ஒரு பாகமாக இருக்கலாம், என்று சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசியா விமானத்தில் பாகம் என்று ஒரு சிலர் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் தெரிவிக்கையில், இது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி தகவல் கிடைக்கும் வரை முடிவுகள் எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம், என போலீசார் தெரிவித்தார். இது சுமார் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட ராக்கெட் பாகம் போன்று உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia beach mysterious aobject


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->