ட்ரம்ப் மீதான தாக்குதல் - பலித்தது பாபா வங்காவின் கணிப்பு..!! - Seithipunal
Seithipunal



அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நேரத்தில், உலகின் மிக பிரபலமான தீர்க்கதரிசி பாபா வங்காவின் கணிப்புகள் பலித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

'பால்கனின் நாஸ்டர்டாம்ஸ்' என்றழைக்கப்படும் உலகின் மிகப் பிரபலமான தீர்க்கதரிசியான பாபா வங்கா, அவ்வப்போது பல்வேறு தீர்க்கதரிசன கணிப்புகளைக் கூறி மிகவும் பிரபலமானவர். இவர் முன்னதாகவே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரது உயிருக்கும் ஆபத்து உள்ளது என்று கணித்துள்ளார்.

மேலும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு காது கேட்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும், அவருக்கு மூளையில் கட்டி ஏற்படும் என்றும் ஏற்கனவே பாபா வங்கா கணித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் டொனால்ட் ட்ரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகி உள்ளதை நிரூபித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர். 

முன்னதாக அமெரிக்க இரட்டை கோபுரங்களின் மீதான தாக்குதல் இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் விபத்து, மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, கோவிட் பெருந்தொற்று மற்றும் ரஷியா - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பாபா வங்கா மிகவும் துல்லியமாக கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் கணிப்புகள் 85 சதவீதம் சரியானதாக இருப்பதாக கூறப்படுகிறது. தனது 12 ஆவது வயதில் புயலில் சிக்கி பார்வையை இழந்த பாபா வங்கா அதன் பின்னரே எதிர்காலம் குறித்து கணிக்க தொடங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baba Vangas Predictions About Former US President Donald Trump Becomes True


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->