குடிமகன்களுக்கு உற்சாக செய்தி.. இனி வீட்டிலேயே 2 நிமிடத்தில் பீர் ரெடி.. பீர் பவுடர் அறிமுகம்.!
Beer powder introduce in Germany
மதுபான கடைகளுக்கு செல்லாமல் டீ போடுவது போல வீட்டிலேயே பீர் தயாரிக்கும் பவுடர் அறிமுகமாகியுள்ளது.
உலகம் முழுவதும் மதுபானங்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு உள்ளது. மதுபானங்கள் உடல்நலத்தை கெடுக்கும் என்பதை தாண்டி பல வகையான மதுபானங்கள் பல வித்தியாசமான சுவை மற்றும் போதைக்காக தயாரிக்கப்படுகிறது.
அதன்படி உலக அளவில் வைன், பீர், ஸ்காட்ச் போன்ற மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் சிலர் தினமும் மதுபானங்கள் குடிக்காமல் இருப்பதில்லை. அதன்படி மதுவுக்கு அடிமையான சிலர் விடுமுறை நாட்களிலும் எப்படியாவது மது அருந்த வேண்டுமென போதைக்காக கள்ளச்சாராயம் போன்றவற்றை குடிக்கின்றனர்.
இந்த நிலையில் எளிதாக வீட்டிலேயே பீர் தயாரிக்கும் முறையை ஜெர்மனி நாட்டை சேர்ந்த Neuzeller Klosterbräueri நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டீ காபி போடுவதைப் போல, வீரை இனி நாம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
அதன்படி இந்த நிறுவனம் பால் பவுடரை போல பீர்பவுடரை அறிமுகம் செய்துள்ளது. இந்த பவுடரை தண்ணீரில் கலக்கி உடனடியாக பீராக மாற்றிக் கொள்ளலாம். ஆனால் தற்போது முதல் கட்டமாக ஆல்கஹால் தன்மை இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதனை ஆல்கஹால் தன்மையுடன் கூடிய பானமாக தயாரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
English Summary
Beer powder introduce in Germany