எதிர்க்கட்சிகள் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும் - எம்.பி ஹேம மாலினி.! - Seithipunal
Seithipunal


கடந்த ஒன்றாம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்த தொடர் ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு சார்பில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் தாக்களும் செய்யப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, தெலுங்கு தேச கட்சி எம்பிகே.ராம் மோகன் நாயுடு உரையாற்றிக் கொண்டிருந்தார். 

அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பாஜக எம்பி ரமேஷ் பிதுரியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதையடுத்து, பாஜக எம்பிக்கள் எம்பி மஹுவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

ஆனால், இதற்கு பாஜக எம்பி ஹேமமாலினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது, "நாடாளுமன்றத்திற்கென ஒரு மரியாதை உள்ளது. இதுபோன்ற தகாத வார்த்தைகளை நாடாளுமன்றத்திற்குள் பயன்படுத்தக்கூடாது. 

அவர்கள் தங்கள் நாக்கைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற அவையில் இதுபோன்று உற்சாகமும், உணர்ச்சிவசமும் படக்கூடாது. நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மரியாதைக்குரியவர்கள்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp hema malini press meet for congrass mp harsh word to bjp mp in parliment


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->