ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து : ஆற்றில் இருந்து 18 பேரின் உடல்கள் மீட்பு..அமெரிக்காவில் சோகம்!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதிய விபத்தில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த விபத்தில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்சின் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் நடுவானில் பிளாக் ஹாக் எனப்படும் ராணுவ ஹெலிகாப்டர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது .இந்தவிபத்தானது  ரோனால்ட் ரீகன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கன்சாசிலிருந்து பறந்த வந்த பயணிகள் விமானம் அங்கு தரையிறங்க இருந்தது என கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் விபத்து நிகழ்ந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அவசர நடவடிக்கையாக அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 800-679-8215 என்ற கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது.கூடுதல் தொலைபேசி எண்களுக்கு அமெரிக்காவிற்கு வெளியில் இருந்து அழைப்பவர்கள் news.aa.com ஐப் பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கனடா, புவேர்ட்டோ ரிக்கோ அல்லது அமெரிக்க விர்ஜின் தீவுகளில் உள்ள விபத்தில் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 800-679-8215 ஐ நேரடியாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bodies of 18 people recovered from river after plane crashes into helicopter Tragedy in America


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->