சூடானில் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் - இரு தரப்பும் ஒப்புதல் - Seithipunal
Seithipunal


சூடானில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ராணுவ படைகளுக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 30,000க்கும் மேற்பட்ட தங்களது நாட்டினரை மீட்பதற்கு ராணுவ உதவியுடன் களமிறங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா, "ஆப்ரேஷன் காவேரி" திட்டத்தின் கீழ் சவுதி அரேபியா உதவியுடன் இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் விமானப்படையின் 2 சி-130ஜே ரக விமானங்கள் மூலம் 2500 பேரை மீட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வரும் மே 4ஆம் தேதி முடிவு பெரும் நிலையில், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் பேச்சுவார்த்தையால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க சூடான் அரசு முடிவு செய்துள்ளன.

இதைத்தொடர்ந்து மீட்பு பணிக்கு ஏதுவாக மே 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இருதரப்பு ஒப்புதலுடன் 7 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்றும், இது தொடர்பாக சூடானின் அதிபர் சால்வா கீர் மயார்தீத்துடன் சூடான் ராணுவ படைகள் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளதாகவும் சூடானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இரு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடம் மற்றும் விவரங்களை அளிக்குமாறு ராணுவ தலைமையிடம் சூடான அரசு வலியுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Both side agree to 7 days ceasefire agreement in Sudan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->