7.3 கிலோ எடை.. 2 அடி உயரம்.. ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்ணால் அதிர்ச்சி.!
Brazil Baby In 7 Kg and 2 Feet
பிரேசில் நாட்டில் 7.3 கிலோ எடை கொண்ட ஒரு ஆண் குழந்தையை 42 வயதான பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார். குழந்தையும், தாயும் நலம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தையானது இரண்டடி உயரம் இருந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அந்தப் பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். எனவே, அவருக்கு பிறந்த குழந்தை உடல் எடை அதிகமாக பிறந்துள்ளது. தற்போது, குழந்தை நலமாக இருக்கிறது. நான்கு கிலோவுக்கு மேல் எடை கொண்ட குழந்தைகள் மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த குழந்தையின் உடலுக்கு செல்லும் குளுக்கோஸ் அளவு அதிகரித்து இருக்கின்றது. எனவே, குழந்தை அதிக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் நீரிழிவு நோய் தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சாதாரணமாக குழந்தைகள் 3 முதல் 3.5 கிலோ எடை கொண்டு இருக்கும் கடந்த 1955இல் இத்தாலியில் 10 கிலோ எடை கொண்ட ஒரு குழந்தை பிறந்தது அதன் பின் தற்போது இந்த குழந்தை அதிகப்படியான உடல் எடையுடன் பிறந்துள்ளது என்று மருத்துவர் கூறியுள்ளார்.
அறுவை சிகிச்சை செய்துதான் இந்த குழந்தையை மருத்துவர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.எனவே தாய்மார்கள் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமானால் தனது உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
English Summary
Brazil Baby In 7 Kg and 2 Feet