ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதம் விதித்த பிரேசில் அரசு..! - Seithipunal
Seithipunal


பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இல்லாமல் விற்றதால், ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதம் விதித்துள்ளது அந்நாட்டு அரசு. சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து, அதிகாரிகள் பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்தது தொடர்பாக நடந்த விசாரணையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் மீது, முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, மூன்றாம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டு கூறப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபோன் விற்பனையில் இருந்து சார்ஜர்களை விலக்குவதற்கான முடிவு, சுற்றுச்சூழல் அர்பணிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Brazilian government imposed fine Rs. 19.17 crore Apple company


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->