கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் !! - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளியான பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக் அரசாங்கத்திற்கான தனது கட்சியின் அறிக்கையை  வெளியிட்டார், வருகின்ற ஜூலை மாதம் 4 ஆம் தேதி தேர்தலில் தங்களது வாக்காளர்களுக்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஒருபோதும் வழங்க முடியாது என்று கூறிய நிதிப் பாதுகாப்பை தாங்கள் வழங்குவதாக உறுதி கூறினார்.

தற்போது வரவுள்ள தேர்தலுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ரிஷி சுனக்கின் ஆளும் கட்சியான பழமைவாத கட்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது, நாட்டின் வரிகளைக் குறைப்பதற்கும், தங்களது ஆண்டு பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் பல திட்டம் தன்னிடம் இருப்பதாக ரிஷி  சுனக் வாக்காளர்களுக்கு உறுதி கூறினார்.

"பழமைவாதிகளான எங்களிடம் உங்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்கான திட்டம் உள்ளது" என்று ரிஷி சுனக் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், "உழைக்கும் மக்கள் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை அதிகமாக வைத்திருக்க உதவுவோம், ஏனென்றால் நீங்கள் அதை சம்பாதித்துள்ளீர்கள், அதை எதற்காக செலவிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது." என்று தெரிவித்தார்.

பிரதமர் ரிஷி சுனக் தங்கள் நாடு மக்களின் ஓய்வூதியங்களைப் பாதுகாப்பதற்கான பழமைவாத உறுதிமொழிகள், தனி நபர் வருமான வரி, தேசிய காப்பீடு மற்றும் VAT ஆகியவற்றை உயர்த்தப்படமாட்டாது என்று உத்தரவாதம் தருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

britain prime minister rishi sunak released his manifesto


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->