குழந்தைக்கு "பக்கோடா" என பெயர் சூட்டிய பிரிட்டன் தம்பதிகள்..!
British couple named baby "Pakoda"
இந்திய தின்பண்டமான "பக்கோடா" வால் ஈர்க்கப்பட்ட ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தம்பதிகள் தங்கள் குழந்தைக்கு, 'பக்கோடா' என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.
இந்திய நாட்டில், நொறுக்குத் தீனியில் முக்கிய இடம் வகிப்பது பக்கோடா. இதை, பிரிட்டனில் பக்கோரா என அழைக்கின்றனர். அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் விற்கப்படும் இந்த பக்கோடாவால் ஈர்க்கப்பட்ட பிரிட்டன் தம்பதிகள், அடிக்கடி அதை வாங்கி சுவைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
சமீபத்தில், அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு, 'பக்கோடா' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பக்கோடா தங்களுக்குப் பிடித்தமான தின்பண்டம் என்பதால், தங்கள் குழந்தைக்கும் அப்பெயரையே சூட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையறிந்த அந்த உணவகத்தின் உரிமையாளர், பக்கோடா என பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்கும், அந்த தம்பதிக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
English Summary
British couple named baby "Pakoda"