கொடூர தாக்குதல்!!! அமெரிக்கா ஏமனின் அவுதிகளை தாக்கியதில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலி...! - Seithipunal
Seithipunal


டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக 2 வது முறையாக பதவியேற்ற பிறகு, ஏமனில் உள்ள ஹவுதிகளுக்கு எதிராக நடத்திய முதல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக  கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.மேலும் ஹவுதி அமைப்புக்கு வழங்கி வரும் ஆதரவை நிறுத்துமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்த கடும்  தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரின் போது, ஹவுதி அமைப்பினர் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கடலோர பகுதிகளில் தாக்குதல் நடத்தி வந்தது.

இதில் இஸ்ரேலுக்கு எதிரான செயல்களை கண்டித்து அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த 20 பேரில் குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்பட கலைஞர்:

இதுகுறித்து ஏ.எஃப்.பி. புகைப்பட கலைஞர் வெளியிட்ட தகவல்களில்,' ஏமனின் தலைநகர் சனாவில் மூன்றுமுறை அதிபயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், குடியிருப்பு பகுதிகளில் கரும்புகைகள் வெளியேறியதாகவும்' தெரிவித்தார்.இதேபோல் ஏமனின் வடக்கு பகுதியான சதா பகுதியிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மத்திய கமாண்ட்:

அமெரிக்காவின் மத்திய கமாண்ட் வெளியிட்ட பதிவுகளில்,'விமானத்தில் வீரர்கள் ஏறுவதும், வான்வெளியில் இருந்து அவர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுவது' தொடர்பான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brutal attack 20 people including children killed in US airstrike on Yemens Awdhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->