சுவிட்சர்லாந்தில் புர்கா தடை உத்தரவு அமலுக்கு வந்தது!
Burqa ban comes into force in Switzerland
சுவிட்சர்லாந்து அரசு இஸ்லாமிய பெண்கள் அணியும் முகமூடி புர்காவுக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு 2021ல் பெடரல் கவுன்சில் அறிவித்தது. கடந்த ஜனவரி 1, 2025 முதல் இந்த தடை உத்தியோகபூர்வமாக அமலுக்கு வந்தது.
தடை விதிக்கும் விதிமுறைகள்:
-
அமல்படுத்தப்படும் இடங்கள்:
- பொது இடங்களில், பரபரப்பான சாலைகள், கடைகள், உணவகங்கள் போன்ற இடங்களில் புர்கா அணிய தடை.
-
விலக்கு அளிக்கப்பட்ட இடங்கள்:
- விமானங்கள், தாதரக வளாகங்கள்,
- வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மசூதிகளில் தடை பொருந்தாது.
-
முகத்தை மறைக்கும் அனுமதி:
- உடல்நலம், பாதுகாப்பு, அல்லது மருத்துவ காரணங்களால் முகம் மறைக்க அனுமதி.
- மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலையை காரணமாக கூறி முகமூடி அணிய அனுமதி இல்லை.
தடையை மீறுவதற்கான அபராதம்:
- சட்டத்தை மீறுபவர்கள் 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
- மேலும் சட்டத்தை மீண்டும் மீண்டும் மீறினால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
சர்ச்சைகளும் எதிர்வினைகளும்:
புர்கா தடை அமலுக்கு வந்ததை சிலர் வரவேற்றாலும், இது மத சுதந்திரத்திற்கு எதிரானதாகும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. குறிப்பாக, இந்த உத்தரவு இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் உரிமையை பாதிக்கும் வகையில் அமைகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
சுவிட்சர்லாந்தின் இந்த நடவடிக்கையானது, பிரான்ஸ், ஆஸ்டிரியா போன்ற நாடுகளில் முன்னரே அமல்படுத்தப்பட்ட புர்கா தடை சட்டங்களின் தொடர்ச்சியாகும்.
English Summary
Burqa ban comes into force in Switzerland