A.I மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்; பிரதமர் மோடி உறுதி..! - Seithipunal
Seithipunal


'ஏ.ஐ., (AI) தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்', என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் பிரதமர் மோடியை இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ., விஷால் சிகா இன்று சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் படத்தை பகிர்ந்த விஷால் சிகா, 'பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் பெருமையாக உள்ளது. ஏ.ஐ. (AI), தொழில்நுட்பம் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம். நம் நாட்டு மக்களிடம் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்த புரிதல் உள்ளது. 

மக்களை மேம்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேசினோம்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த அவரது பதிவை டேக் செய்து பிரதமர் மோடி அவர்கள்,  'உண்மையிலான மிகுந்த ஆழமான கலந்துரையாடல். ஏ.ஐ.(AI), தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக திகழ வேண்டும் என்று இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதை பயன்படுத்தி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளோம்', எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New opportunity for youth through AI


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->