நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்.! பங்குகளை விற்க மந்திரி சபை ஒப்புதல்.!
Cabinet approves SriLankan Airlines stake sale
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகளை விற்க இலங்கை மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அந்நிய செலாவணி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் அரசியல் குழப்பங்களால் இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் அரசு நிறுவனங்கள் பல கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கடும் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரி சபை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தேர்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் விற்று, உரிமையை கைமாற்றுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளது.
English Summary
Cabinet approves SriLankan Airlines stake sale