உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பிரபல கோடீஸ்வரர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டின் கோடீஸ்வரரும், கரீபியன் பிரீமியர் லீக்கின் நிறுவனருமான அஜ்மல் ஹசன் ஐக்கிய அரபு அமீரகத்தின் Palm Jumeirah-வில் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹொட்டல் ரிசார்ட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் உடனே அஜ்மலை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அஜ்மல் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இந்த நிலையில், அஜ்மலின் உடலை கனடாவுக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அஜ்மல் ஹசனின் தாயார் இந்தியாவின் லக்னோவில் உள்ள புகழ்பெற்ற பர்லிங்டன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

canada billionarie ajmal hasan died


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->