கனடாவில் ஹிந்து கோயில்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்! காலிஸ்தான் ஆதரவாளர்கள் அராஜகம்!
Canada Hindu Temple Attacked
கனடாவில், ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சாறே நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமிநாராயண கோயிலில், கடந்த இரவு 3 மணி அளவில் இரண்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள் நுழைந்து கோயிலில் சேதம் விளைவித்து சென்றுள்ளனர்.
கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் “காலிஸ்தான் ஆதரவு” வாசகங்களை எழுதிவிட்டு, முகத்தை துணியால் மறைத்தபடியே தாக்குதலை மேற்கொண்டனர்.
மேலும், கண்காணிப்பு கேமராவையும் திருடிச் சென்றுள்ளனர். சம்பவத்தைக் கண்டிக்குமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதுடன், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலிஸ்தான் இயக்கத்தினர், பஞ்சாபைப் பிரித்து தனிநாடு உருவாக்கும் நோக்குடன், வெளிநாடுகளில் இருந்து இந்து சமுதாயம் மீது தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. மறைமுக ஆதரவு வழங்கி வருகிறது.
அண்மையில், காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வெறும் இரண்டு நாட்களுக்கு முன் வான்கூவர் நகரில் உள்ள குருத்வாராவில் கூட காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Canada Hindu Temple Attacked