பாலியல் குற்றம்: சீனாவில் கனடா ராப் பாடகருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை.!
Canadian singer sentenced to 13 years in prison for sex crime in China
கனடா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நீடிக்கிறது. இந்நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
32 வயதான பாப் பாடகர் கிரிஸ் வூ, ஒரு காலத்தில் சீனாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு கலைஞர்களில் ஒருவராக இருந்தார். இவர் மூன்று குடிபோதையில் இருந்த பெண்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உடலுறவு கொண்டதாகவும்,
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்நிலையில் நேற்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெய்ஜிங் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது சிறை தண்டனை முடிந்ததும் அவர் நாடு கடத்தப்படுவார் என்று சீன நீதிமன்றம் தெரிவித்ததாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
English Summary
Canadian singer sentenced to 13 years in prison for sex crime in China