இங்கிலாந்து அரசருக்கு புற்றுநோய் உறுதி - பரபரப்பை ஏற்படுத்திய அரண்மனை அறிக்கை.!
cancer conform england king charles
இங்கிலாந்து அரச பரம்பரையின் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகன் அரசர், மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார்.
இவர் கடந்த சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அரசர் மூன்றாம் சார்லசுக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், 'புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது மேலும் சில பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளது. இதற்காக மன்னருக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மன்னர் சிகிச்சையில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும் சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை அரசர் வழக்கம் போல் மேற்கொள்வார். மன்னர் விரைவில் குணமடைந்து பொதுபணிக்கு திரும்புவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
cancer conform england king charles