சோதனைச் சாவடியில் திடீரென வெடித்த கார்: 2 பேர் பலி! பயங்கரவாத தாக்குதலா? - Seithipunal
Seithipunal



அமெரிக்கா-கனடா இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள ரெயின்போ பாலம் ஒன்டாரியோவை நியூயார்க் உடன் இணைக்கும் 4 எல்லை கடப்புகளில் ஒன்றாக உள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா-கனடா எல்லை சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்த கார் திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எல்லைப் பகுதியில் வாகனம் வெடித்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் முயற்சியாக இருக்கலாம் என எஃப் பி ஐ பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக நியூயார்க் ஆளுநர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நயாகரா நீர்வீழ்ச்சியில் உள்ள ரெயின்போ பாலத்தில் நடந்த சம்பவத்தை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car suddenly exploded check point 2 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->