5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.!
central finance minister nirmala seetharaman going to america
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதில், அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் என்ற கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, தற்போது இந்தியாவில் வெளிவந்த 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது. இதற்குத் தேவையான ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
5ஜி தொழில்நுட்பத்தின் மூலம் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம். இதனை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவையைப் பெற முடியும்" என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதல் கட்டமாக 5ஜி சேவையை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாராணாசி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
English Summary
central finance minister nirmala seetharaman going to america