தைவான் எல்லையில் அமெரிக்கா போர்க்கப்பல்கள்.! சீனா கடும் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியாக சீனா நினைத்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறிஅமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைத் தலைவா் நான்சி பெலோசி தைவானுக்கு வருகை தந்தார்.

மேலும் அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4 முறை தைவான் சென்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தென் சீன கடல் பரப்பில் சீனாவுக்கும், தைவான் நாட்டிற்கும் இடையேயான நீர் சந்திப்பில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஆன்டிடாம் மற்றும் யு.எஸ்.எஸ் சான்சிலர்ஸ்வில்லே ஆகிய இரண்டு ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளன.

இதையடுத்து அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு ஆத்திரமூட்டும் செயல் என்றும சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கப் கப்பல்களின் நகர்வை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், எந்த நேரத்திலும் கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் ஆத்திரமுட்டலை முறியடிக்க படைகள் தயாராக உள்ளதாக சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளை பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஷியி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China condemns action of US warships in Taiwan border


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->