தவறான பதிவுகளை பதிவிட்ட 66 ஆயிரம் சமூகவலைதள கணக்குகள் மூடல் - சீன அரசு அதிரடி.!!
china govt 66 thousand social media account close
தவறான பதிவுகளை பதிவிட்ட 66 ஆயிரம் சமூகவலைதள கணக்குகள் மூடல் - சீன அரசு அதிரடி.!!
சீன நாட்டில் சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்புதல், பணமோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக அரசாங்கத்திற்கு பல்வேறு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளது. அந்த புகாரின் படி சீன அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் முதல் சிறப்பு சோதனையை மேற்கொண்டது.
அந்த சோதனையில், சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்டதாக சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை மூடி உள்ளதாக அந்நாட்டின் இணையதள விவகார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் டிக்-டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் சுமார் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக துண்டிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
china govt 66 thousand social media account close