பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வர இலங்கை அனுமதி
China made Pakistan ship comes to srilanka
பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வர இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
சீனா பாகிஸ்தானின் கடற்படைக்காக பி.என்.எஸ். தைமூர் என்ற ஏவுகணை தாங்கி போர்க்கப்பலை, ஷாங்காய் நகரில் உள்ள ஹுடாங் - ஸாங்குவா கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கியுள்ளது.
மேலும் போர்க்கப்பல், கம்போடிய மற்றும் மலேசிய கடற்படைகளுடன் பயிற்சியில் ஈடுபட்டது.
இதையடுத்து மலேசியாவில் இருந்து புறப்படும் கப்பலை வங்கதேசத்தில் சட்டோகிராம் துறைமுகத்தில் ஆகஸ்ட் 7-லிருந்து 10ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்ட நிலையில், இந்தியா இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் என்பதால் பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி மறுத்துள்ளார்.
இதையடுத்து மலேஷியாவில் இருந்து செல்லும் பி.என்.எஸ். தைமூர் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஆகஸ்ட் 12 - 15 வரை நிறுத்தி செல்ல இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
English Summary
China made Pakistan ship comes to srilanka