திருமணம் செய்ததால் தான் வேலை! அதிர்ச்சி கொடுத்த நிறுவனத்தை வறுத்தெடுத்த மக்கள்!
China Must Marriage in Staff order
சீனாவில் சமீபத்தில் திருமண வீழ்ச்சி மற்றும் பிறப்பு வீழ்ச்சி அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. பெரும் பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு மற்றும் வாழ்க்கைச் சுமைகளை காரணமாக காட்டி, இளைஞர்கள் திருமணத்தைத் தவிர்க்கின்றனர்.
இந்த நிலைமையை சமாளிக்க சில நிறுவனங்கள் திருமணத்திற்கு ஊக்குவிக்கும் வகையில் ஆபத்தான நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கின்றன. இது போல, குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் பிரச்சினை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உருவாகி வருகிறது.
இந்நிலையில், சீனாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தனது ஊழியர்களை திருமணம் செய்துக் கொள்ள வலியுறுத்தி சர்ச்சைக்குரிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனம், மார்ச் மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படும் என தனது ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், திருமணம் செய்யாதவர்களுக்கு, அதற்கான காரணம் மற்றும் தங்கள் வாழ்க்கை குறித்த சுயவிமர்சனக் கடிதம் எழுதுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ஊழியர்கள் மட்டுமல்லாமல் சமூக வட்டாரத்திலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனால், அந்த நிறுவனம் தனது இந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.
English Summary
China Must Marriage in Staff order