உணவகத்தில் திடீர் வெடி விபத்து: 2 பேர் பரிதாப பலி! - Seithipunal
Seithipunal


வடக்கு சீனாவின் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனா, பெய்ஜிங் சான்ஹே நகரின் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு உணவகத்தில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கரமாக வெடி விபத்து நிகழ்ந்தது. 

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த வெடிவிபத்தில் உணவகம் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியதால் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் முதற்கட்ட விசாரணையில் வாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China restaurant explosion 2 people killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->