மாடு, ஒட்டகத்தை தொடர்ந்து புலி சிறுநீர் விற்பனை! கொந்தளிக்கும் மக்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மாட்டின் சிறுநீரும், பாலைவன பகுதிகள் உள்ள சில நாடுகளில் ஒட்டகத்தின் சிறுநீரும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சீன வனவிலங்கு பூங்காவில் புலி சிறுநீர் விற்பனைக்கு வந்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யாங் பிஃபெங்சியா வனவிலங்கு பூங்காவில், சைபீரிய புலியின் சிறுநீரை முடக்குவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து எனக் கூறி விற்கின்றனர். 

250 கிராம் பாட்டில் 50 யுவான் (ரூ.600)க்கு விற்கப்படும் இந்த சிறுநீரை, வெள்ளை ஒயினுடன் கலந்து பயன்படுத்தலாம் என பூங்கா நிர்வாகம் விளம்பரப்படுத்துகிறது.

சிறுநீர் பாட்டிலில், முடக்குவாதம், தசை வலி போன்ற நோய்களுக்கு பயன்படுத்தலாம் என அச்சிடப்பட்டுள்ளது. பூங்கா ஊழியர்கள் சிறுநீரை சேகரித்து, வெள்ளை ஒயினுடன் கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம் அல்லது குடிக்கலாம் என தெரிவிக்கிறது.

ஆனால், இதனை வாங்கி குடித்த மற்றும் தடவிய வாடிக்கையாளர்கள் தங்களின் உடனில் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவ நிபுணர்கள், புலி சிறுநீரில் மருத்துவ குணங்கள் இல்லை எனவும், இதனால் புலிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் எனவும் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

china sale tiger urine


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->