அமெரிக்க சபாநாயகரை சந்தித்தால்.. கடும் நடவடிக்கை - தைவானுக்கு சீனா எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


சீனா - தைவான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், தைவான் அதிபர் சாய் இங்-வென் அமெரிக்கா வழியாக கவுதமலா மற்றும் பெலிஸ் ஆகிய தென் அமெரிக்கா நாடுகளுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த பயணத்தின்பொழுது தைவான் அதிபர் சாய் இங்-வென், அமெரிக்கா சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்கா சபாநாயகர் மற்றும் தைவான் அதிபருக்கும் இடையே நடைபெறும் சந்திப்பிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக சீன அமைச்சரகத்தின் தைவான் விவகார செய்தி தொடர்பாளர் ஜு பெங்லியன், தைவானின் தூதரக நட்பு நாடுகளுக்கு தைவான் அதிபர் செல்லும் பொழுது அமெரிக்கா அதிகாரிகளை எந்த காரணம் கொண்டும் சந்திக்கக் கூடாது என்றும், இதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம், இதை மீறினால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தைவான் அதிபருக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வதிலிருந்தும், போக்குவரத்து குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் தொடர்பு செய்வதிலிருந்தும் அமெரிக்கா முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China warns Severe action taken If Taiwan president meet US speaker


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->