உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால்... தைவான் மீது சீனா படையெடுக்கும் - நேட்டோ தலைவர் எச்சரிக்கை - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்துவரும் நிலையில், உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தனது படைகளுடன் தீவிிர தாக்குதல் நடத்தி முன்னேறி வருகிறது. இந்நிலையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அதைத் தொடர்ந்து சீனா தைவான் மீது படையெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ரஷ்யா அதிபர் புடினுக்கு கிடைக்கும் வெற்றி, சீனாவை உற்சாகமடையச் செய்யும் எனவும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி தனது ராணுவ பலத்தால் தைவானை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பியாவில் தற்பொழுது நிகழ்ந்து வரும் போர், நாளை ஆசியாவிலும் நடைபெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே உக்ரைனின் பாக்முட் நகரம் இன்னும் சில நாட்களில் ரஷ்யாவிடம் வீழ்ச்சியடையும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China will invade Taiwan if Russia wins ukraine war


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->