அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் சீன ஆலோசகர் சந்திப்பு.!
Chinese advisor meet US foreign affairs minister
சீனாவின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகராக வாங் யீ பதவியேற்ற பின், முதல் அரசு முறை பயணமாக ஐரோப்பாவிற்கு சென்றுள்ளார். சுமார் எட்டு நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்தில் இத்தாலி, ஹங்கேரி, ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வாங் யீ பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவுடன் பழகும் சீனா, ஐரோப்பாவிலும் சீனாவின் நற்பெயரை நிலைநாட்டுவது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுள்ளார்.
அங்கு பிரான்ஸ் அதிபர் சீனாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தை பற்றி விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முனீச் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மந்திரி ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவு கொள்கை ஆலோசகராக வாங் யீ சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்க ராணுவ தளத்தின் மேல் சீனாவின் உளவு பலூன் விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இரு நாட்டின் அமைச்சர்களிடையேயான சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Chinese advisor meet US foreign affairs minister