இந்திய மருந்துகளை வாங்க சீன மக்கள் ஆர்வம்..!! சீன சமூக வலைதளங்களில் வெளியான தகவல்..!! - Seithipunal
Seithipunal


சீனாவில் உருமாறிய பி.எஃப் 7 வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் சீன அரசு நடப்பாண்டில் இந்தியாவின் ஃபைசர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பாக்லோவிட் மற்றும் அஸ்வுடின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கியது. இந்த மருந்துகள் சீனாவில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. 

இந்த நிலையில் சீனாவில் மருந்துகளின் தேவை அதிகரித்து வருவதால் மலிவு விலையில் கொரோனா ஜெனிடிக் மருந்துகளை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்ய பெரும்பாலான சீனர்கள் விரும்புவதாக சீனப் பத்திரிக்கையான சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பு மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் பிரிமோவிர், பக்சிஸ்டா, மொல்நுவன்ட், மோல்நட்ரிஸ் ஆகிய நான்கு மருந்துகளை இந்தியாவில் இருந்து சீனர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து செய்து விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் இந்தியாவின் ஜெனிடிக் தடுப்பு மருந்துகள் ஒரு பெட்டி இந்திய மதிப்பில் ரூ.11,870 விற்பனை செய்யப்படுவதாக சீன சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா மருந்துகள் சீன அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்துகளை சீனாவில் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என சீன அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese people interested in buying indian Corona medicines


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->