உக்ரைனில் அணை உடைப்பு - பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் - Seithipunal
Seithipunal


நேட்டோவில் உக்ரைன் இணைய விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தற்பொழுது ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் இப்போரில் உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களை கைப்பற்றி ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

இருப்பினும், உக்ரைன் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத பலத்துடன் ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் தெற்கு உக்ரைன் நகரமான நோவா ககோவ்கா பகுதியிலுள்ள ககோவ்ஸ்கா அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டினிப்ரோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கார்சன் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நோவா ககோவ்காவில் உள்ள அணை உடைப்பால் 80 நகரங்கள் மற்றும் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் அணையிலிருந்து வெளியேறும் நீர் மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் அணையை தகர்த்தது யார்? என்பது உறுதியான தகவல் இல்லை. இருப்பினும், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாடுகளும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உக்ரைனின் ஜாபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு இந்த அணையிலிருந்து எடுக்கும் நீரைதான் அதன் அணு உலைகளைக் குளிர்விக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cities under flood as Ukraine dam collapsed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->