மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்பு!
Claudia sheinbaum sworn in as mexico first female president
நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்தில் மெக்சிகோவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ், மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா இடதுசாரி கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் உள்ளிட்டோர் வேட்பாளராக களமிறங்கினர். இதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சி சார்பில் முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷீன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் மெக்சிகோவில் 3 மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அந்த நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் மனைவி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கிளாடியா ஷீன்பாம், உலக அளவில் புகழ் பெற்ற காலநிலை ஆராய்ச்சியாளர் என்று கூறப்படும் நிலையில், இவர் 2007-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.
தொடர்ந்து 2018-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று மெக்சிகோ நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். இதற்கிடையே கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Claudia sheinbaum sworn in as mexico first female president