கொலம்பியா | தீடீரென தோன்றிய நிலநடுக்கம்! அச்சமடைந்த பெண்ணின் அவசர செயல்! - Seithipunal
Seithipunal


கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் திடீரென நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரெக்டர் அளவுகோலில் 6.3 புள்ளியாக பதிவானது. 

இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதில் வீட்டிலிருந்து பாத்திரங்கள் உருண்டோடின. இதனால் பொதுமக்கள் பயந்து வீடுகளில் இருந்து வெளியே வந்து வீதிகளில் நின்று கொண்டனர்.  

பொதுமக்கள் அனைவரும் நீண்ட நேரம் வீதிகளில் பயத்துடன் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் 10வது மாடியில் இருந்த ஒரு பெண் உயிருக்கு பயந்து அங்கிருந்து கீழே குதித்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இது குறித்து அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வருவதற்குள் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

வீதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நீண்ட நேரம் கழித்த பின் வீடு திரும்பினர். கடந்த 2019 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடந்த நிலநடுக்கத்தில் 11 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Colombia sudden earthquake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->