கட்டுக்கடங்காத காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகளை காலி செய்த மக்கள்!  - Seithipunal
Seithipunal


கனடா மேற்கு எல்லையில் உள்ள பிராந்திய பிரிட்டிஷ் கொலம்பியாவில் பெரும்பாலும் பெரிய நீளமான நதிகள் மற்றும் பெரிய மரங்கள் உள்ள நீண்ட மற்றும் படர்ந்த மலைத்தொடர்களை உள்ளடக்கிய பகுதியாக உள்ளது. 

திடீரென இந்த பகுதிகள் தீ பற்றி வேகமாக பரவ தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். 

இந்த பிராந்தியம் முழுக்க திடீர் தீ விபத்து காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தீ வேகமாக பரவுவதால் கெலோனா நகரத்தில் 2400 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன. 

இதேபோல் எல்லோ நைஃப் பகுதியை நோக்கியும் தீ வேகமாக பரவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கார் மற்றும் விமானம் மூலமாக வேறு இடத்திற்கு புறப்பட்ட சென்றனர். 

அந்த பகுதியில் வசிக்கும் 20 ஆயிரம் பேரில் 19000 பேர் ஊரை விட்டு வெளியேறி விட்டனர். மீதம் உள்ளவர்களை வெளியேற வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சரான ஷேன் தாம்ப்சன் உத்தரவிட்டுள்ளார். 

கொலம்பியாவில் வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காட்டுத்தீ  சம்பவங்கள், கனடா நாட்டில் தொடர்ந்து பல முறை ஏற்பட்டுள்ளன. 

மாறிவரும் பருவநிலை, அதிக வெப்பம் போன்றவை இதற்க்கு காரணமாக உள்ளது. இந்த சம்பவத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கெலோனா சர்வதேச விமான நிலையத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் வான்வழி தீயணைப்பு படை தவிர பிற விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Columbia wildfire 15000 homes evacuate


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->