பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் தேவை - ஐநா மாநாட்டில் வலியுறுத்தல்
Conclusive measures are needed to control climate change
ஐநாவின் 27வது பருவநிலை மாற்ற மாநாடு எகிப்தில் ஷா்ம்-அல்-ஷேக் நகரில் சிறப்பு ஏற்பாடுகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாநாடு, இந்த ஆண்டு நவ.18-ஆம் தேதி வரை எகிப்தில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோபைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பல உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளை குறித்தும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாநாட்டில் உலக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து பெட்ரோல், நிலக்கரி போன்ற படிம எரிபொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திற்கு இணையான கடுமையான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாநாட்டில் காற்றில் கலக்கும் கரியமில வாயுவை கட்டுப்படுத்துவது குறித்தும் உலக நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
English Summary
Conclusive measures are needed to control climate change