ஹரியானா சட்டசபைத் தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை.! - Seithipunal
Seithipunal


பாஜக ஆட்சி செய்து வரும் அரியானா மாநிலத்தில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடநது முடிந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியை தொடரும் நோக்கில் களமிறங்கியது. அதே சமயம் 10 ஆண்டுகளாக அதிகாரத்தை இழந்திருந்த காங்கிரஸ், ஆட்சியை பிடிக்கும் வேகத்தில் களமிறங்கியது.

இதைத் தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜே.ஜே.பி-ஆசாத் சமாஜ் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளும் காலத்தில் இருந்தன. இதனால், ஹரியானாவில் பலமுனை போட்டி நிலவியது. 

இந்த நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியத்தில் இருந்து காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அதாவது, காங்கிரஸ் 42 தொகுதிகளிலும், பாஜக 22 தொகுதிகளிலும் மற்றவை மூன்று தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass leading hariyana assembly election result


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->