உலகில் முதல்முறையாக இளைஞர் ஒருவருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி.! - Seithipunal
Seithipunal


இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் ஸ்பெயின் நாட்டிற்கு 5 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பிய அவருக்கு திடீரென்று காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சிகிச்சையில் இருந்த போது, உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. இதன் பின்னர் அவருக்கு குரங்கு அம்மை நோய் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த நிலையில், அவர் ஏற்கனவே எச்.ஐ.வி நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் மருத்துவர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவருக்கு எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு எச்.ஐ.வி உறுதி செய்யப்பட்டது.

ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தற்போது அவர் கொரோனா தொற்றில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona Monky Fox HIV Affected person


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->