இனி கொரோனாவை கண்டுபிடிப்பது ஈஸியான வேலை.. புதிய செயலி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கண்டுபிடிக்கும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரிகல் பொறியியல் துறையின் இணை பேராசிரியராக பணிபுரிபவர் இலங்கையை சேர்ந்த உடாந்த அபேவர்த்தனே. இவர் தனது குழுவினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று நோயை கண்டுபிடிக்கும் புதிய செயலியை உருவாக்கியுள்ளார்.

அந்த வகையில் 'ரெஸ்ஆப்' என்ற செயலியை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது கொரோனாவை மட்டுமல்லாமல் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நுரையீரல் போன்ற சுவாச நோய்களையும் கண்டுபிடித்து விடும் என கூறப்படுகிறது.

மேலும், இருமல், சளி காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வைத்துக் கொண்டே ஒருவருக்கு எந்த மாதிரியான வியாதி ஏற்பட்டிருக்கும் என்றும் அதன் தீவிரம் என்ன என்றும் இந்த செயலி தெரிவித்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்த செயலி 92 சதவீதம் துல்லியமாக முடிவுகளை வெளியிட உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய உயிர் மருத்துவ தொழில் நிறுவனமான பைசர் இந்த செயலியை ரூ.1474 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது. 

மேலும், பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவ கட்டுப்பாடு அமைப்புகளின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த செயலி பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid application introduce in Australia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->