துருக்கி மற்றும் சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய கிறிஸ்டியானோ ரொனால்டோ.! - Seithipunal
Seithipunal


துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ உதவி செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கி எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1.5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை இழந்து நடுத்தெருவில் தவித்து வருகின்றனர். இதனையடுத்து உலக நாடுகள் பலவும் அத்தியாவசிய பொருட்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வருகின்றன.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அனுப்பி வைத்துள்ளார்.

அந்த வகையில் துருக்கி, சிரியா மக்களுக்கு தேவையான உணவு, பால், மருந்து பொருட்கள், தலையணைகள், போர்வைகள் என பல பொருட்களை தனிவிமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இவர் உதவி செய்வது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னதாக அவர் பலமுறை உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cristiano Ronaldo helps turkey and syriya peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->