CT 2025: ரசிகர்கள் கோஷம்...நம்ம கோலி உலக லெவல் பேமஸ் போல!!!
CT 2025 Fans chant Our Kohli is like a world class celebrity
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி மாநிலத்தில் இந்த ஆண்டிற்கான CD- 2025 சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ள போட்டிக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பது இந்தியாவில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல ஆண்டுகளாகவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் எதிரிகளாகவே பாவித்துப் பார்க்கப்பட்டாலும், பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் உள்ளன என்பது இப்போது தெரியவந்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/viratkoli-lj8jt.jpg)
மேலும் இதுவரை இந்திய அணியின் வீரரான விராட் கோலி பாகிஸ்தான் மண்ணில் ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2025 சாம்பியன் டிராஃபில் பாகிஸ்தான் மண்ணில் இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க முக்கியமாக விராட் கோலியை நேரில் பார்க்கலாம் எனப் பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் ரசிகர்களுக்குத் துரதிஷ்டமாக இந்திய அணி நிர்வாகம் பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது.
இதைத்தொடர்ந்து இந்திய அணி விளையாடும் சாம்பியன் டிராபி போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியது.
![](https://img.seithipunal.com/media/pakisthan hh-hrdkx.jpg)
இத்தகவலின் போது தான் கடாய்ச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி முடிவில் இந்தக் கோஷத்தை எழுப்பி உள்ளார்கள். அந்தப் போட்டியானது முடிந்த பிறகு ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி;
அப்போது அங்கு பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் " இந்தச்போ சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் எந்த அணி விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறீர்கள்? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அங்கிருந்த ரசிகர்கள் பலர், " விராட் கோலி, விராட் கோலி, விராட் கோலி" எனக் கோஷம் எழுப்பினர். மற்றொரு நாட்டின் ரசிகர்கள், அதிலும் இந்திய அணியின் எதிரி அணியாகப் பார்க்கப்படும் ஒரு அணியின் ரசிகர்கள் இந்திய வீரரான விராட் கோலிக்கு ஆதரவாக இப்படிக் கோஷம் எழுப்புவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் பிப்ரவரி 23 அன்று நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
CT 2025 Fans chant Our Kohli is like a world class celebrity