மின் உற்பத்தி பாதிப்பால் சிரமத்திற்கு ஆளாகிய கியூபா.!  - Seithipunal
Seithipunal


கியூபா நாட்டில் ஏராளமான மின்உற்பத்தி நிலையங்கள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதன் காரணமாக மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு முழுவதும் மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாட்டின் தலைநகர் ஹவானாவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் இருக்கும் மடான்சாஸ் மாகாணத்தில் உள்ள மின்உற்பத்தி ஆலையில் மிகப் பெரிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. 

இந்தக் கோளாறு மின் உற்பத்தி மற்றும் மின் வினியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், நாட்டில் உள்ள பதினைந்து மாகாணங்களில் பதினொரு மாகாணங்களில் மின்வெட்டு பாதிப்பு ஏற்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த 13-ந் தேதி கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், மின் இணைப்புகளை சேதமடைந்துள்ளது. இதனால், நாட்டில் பாதிக்கும் அதிகமான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuba country suffer for power outage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->