ஈராக்கில் தொடரும் வன்முறை.! நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பு - Seithipunal
Seithipunal


ஈராக்கில் தொடரும் வன்முறையால் அந்நாட்டு ராணுவம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது.

ஈராக்கில் முகமது அல்-சூடானி தலைமையில் புதிய அரசு அமைவதற்கு  நாடு முழுவதும் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக ஈராக் நாடாளுமன்றத்திற்கு நுழைந்து, முற்றுகையிட்ட ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைதொடர்ந்து ஆளும் கட்சியினருக்கும் அல்-சதர் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட கடும் மோதலில் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் ஈராக் ராணுவம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curfew announced in Iraq over continous violence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->