ட்ரம்பின் ஹோட்டலுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்த சபைர்ட்ரக்.!
cybertruck explods in before donald trumph hotel
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு முன்பு நேற்று டெஸ்லா சைபர்ட்ரக் தீ பிடித்து வெடித்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் தெரிவித்ததாவது:- "டெஸ்லா சைபர்ட்ரக் ஒன்று ஹோட்டலுக்கு முன்பு வந்து நிற்கிறது. அந்த டிராக் திடீரென பட்டாசு வெடிப்பதைப் போல வெடித்து தீப்பிடித்து எரிகிறது என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்து இருப்பதாவது:- "டெஸ்லா சைபர்ட்ரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் இது வாகன தீவிபத்துக்கு தொடர்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
cybertruck explods in before donald trumph hotel